ஆசிரியர்களுடன் அன்னையர் தினம் கொண்டாடிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி....
ஆசிரியர்களுடன் அன்னையர் தினம் கொண்டாடிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி....

திருச்சி,மே.13: ஆசிரியர்கள் தங்கள் வகுப்புகளில் மாணவர்களுக்கு தாய்மொழியின் அவசியத்தை கற்றுத் தாருங்கள் என்று திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார் ...

அரசுப்பள்ளியில் சிறப்பாக பணிபுரிந்து வரும் சாதனை ஆசிரியர்களுக்கு கல்வியாளர் சங்கமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அன்னையர் தின கேக் வெட்டி கொண்டாடினார்..அப்போது அவர் பேசியதாவது: என்னை இங்கு பேச அழைக்கும் போது அரசியலும் அறமும் என்ற தலைப்பிலேயே பேச அழைத்தார்கள்..ஆனால் நான் இங்கு ஓர் அரசியல் வாதியாக வர விரும்பாமல் தாய்மொழிகாப்போம் என்ற தலைப்பிலே பேச வந்துள்ளேன்...இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள உங்களால் தான் இளைஞர்களை உத்வேகப்படுத்தி உங்களைப் போல கண்டிப்பாக  ஓர் நல்ல சமூகத்தை அமைக்க முடியும்.நான் பள்ளி,கல்லூரியில் படிக்கும் போது உங்களைப் போன்ற ஆசிரியர்கள் வழிநடத்தியதால் தான் இன்று இந்த உயர் நிலைக்கு வந்துள்ளேன். தியாகிகளையோ, ஆசிரியர்களையோ முன்னாள் தியாகிகள் இந்நாள் ஆசிரியர்கள்  என்று கூறுவது கிடையாது..தியாகிகள் ஆசிரியர்கள் என்றே வாழ்நாள் முழுவதும் கூறுகிறோம்..இங்கு பேச வரும் பொழுது எனக்கு பதற்றமாக உள்ளது என என் மனைவி இடத்திலேயே கூறினேன்..ஆனால் அவளோ  ஈரோடு மாநாட்டிலே மிகவும் எழுச்சியாக பேசினீர்கள் .இங்கு ஏன் தயங்குகிறீர்கள் என்றாள்......

போர்களத்திலே கூட தலைமை பொறுப்பேற்று எதிரியை வீழ்த்தி வெற்றி பெற்று விடலாம் ..ஆனால் படித்த ஆன்றோர் சான்றோர் மத்தியில் பேசுவது அவ்வளவு கடினம் என்றேன்.ஆசிரியர்களாகிய நீங்கள் என்னிடம் பல நல்ல விஷயங்களை  கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள்..ஆசிரியர்களாகிய உங்களிடம் நான் தான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளது... இரண்டு முறை கைதட்டினால் உடனே மற்றவர்கள் திரும்பி பார்ப்பார்கள்.ஓசைக்கு எவ்வளவு வலிமை உள்ளதோ அது  போல நாம் பேசும் பாஷைக்கும்  வலிமை உள்ளது...மொழி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இன்றைக்கு ஒவ்வொரு மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.நமஸ்காரம் என்பதை வணக்கம் என்றும்,மந்திரி என்பதை அமைச்சர் என்றும் மாற்றிய பெருமை நான் சார்ந்த  இயக்கத்துக்கே உண்டு..தமிழுக்கு தனித்துறை அமைத்து செம்மொழி என்ற அந்தஸ்தை வழங்கியதும் நான் சாரந்த இயக்கமே என்றார்..இந்திய அளவில் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்,உலக அளவில் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் .தமிழ் நாட்டில்   தாய்மொழி  தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்கள்..நாம் மட்டும் ஏன் ஹிந்தி,ஆங்கிலம்,தமிழ் ஆகிய மூன்று மொழிகளை படிக்க   வேண்டும் ..உலக அளவில் பொதுமொழியாக உள்ள ஆங்கிலத்தை மட்டும் படித்தால் போதாதா ஏன் ஹிந்தி படிக்க வேண்டும்.இனிக்கின்ற தமிழை இனிக்க வைக்க வேண்டும்.... எனவே ஆசிரிய பெருமக்களாகிய நீங்கள் தமிழ் பற்றை மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும் இந்த நிகழ்ச்சியின் மூலம் என்னை உத்வேகத்துடன் செயல்பட கல்வியாளர் சங்கமம் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளது..வருங்காலத்தில் கல்வியாளர் சங்கமத்தின் மூலம் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.. கல்வியாளர் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சதீஷ்குமார் பேசியதாவது:ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு ஆசிரியர் சாதிக்கும் போது ஏன் எல்லா ஆசிரியர்களும் சாதிக்க கூடாது என்ற ஒரு எண்ணம் வந்ததன் நோக்கம் தான் கல்வியாளர் சங்கமம் உருவாக காரணமாகும்.எல்லோரும் கல்வித் துறையில் ஓர் மாற்றத்தை கொடுக்கனும் என்று தான் வருகிறார்கள்..ஆனால் அந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமையவில்லை..எனவே அந்த வாய்ப்பை அமைத்து கொடுக்கும் மேடையாக கல்வியாளர்கள் சங்கமம் ஏற்படுத்தி தருகிறது...தமிழகம் முழுவதும் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்கள் சாதிக்க துடிக்கும் ஆசிரியர்களின் அறிவு பகிர்வு அனுபவ பகிர்வு கிடைக்க இது மிகச் சிறந்த களமாக திகழ்கிறது...ஆசிரியர்கள் மாணவர்களுக்காக என்ற ஒற்றை இலக்கோடு முழுக்க முழுக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் தன்னார்வர்களையும் கொண்டு இயங்குகிறது..இதற்கு ஆலோசனை வழங்க கல்வித்துறை அதிகாரிகளும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், ஊடக நண்பர்களும் இணைந்து பயணிப்பது குறிப்பிடத்தக்கது...கல்வியாளர் கடந்து வந்த பாதையில் மிகவும் முக்கியமாக இது வரை மாநில அளவில் 5 ஆசிரியர் சந்திப்பு நிகழ்வுகளையும் அழகப்பா பல்கலைக் கழகத்துடன் இணைந்து பன்னாட்டு கருத்தரங்கையும் தன்னார்வ அமைப்புடன் இணைந்து இலவச உண்டு உறைவிட வசதியுடன் பத்துமாத கால அளவில்  ரூ.30 இலட்சம் செலவில் நீட் தேர்வு பயிற்சி முகாமினை ஒருங்கிணைத்தது  மிகச் சிறந்த சாதனையாக கருதுகிறேன்..ஆசிரியர்களுக்கு பயிற்சி தளங்களை வழங்க கூடிய வாங்க பேசலாம்,இலக்கிந மேடைகள,மாணவர்களுக்கு வழிகாட்டும் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் தேசமே எழு நிகழ்ச்சியும் தொடர்ந்து ஒருங்கிணைத்து நடத்தி வருகிறேன்..கல்வியாளர் சங்கமம் அமைப்பானது கடந்த ஆண்டில் ரோட்டரி அமைப்புடன் இணைந்து தமிழக அளவில் சிறந்த 81 ஆசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கி பாராட்டி கௌரவித்தோம்..இந்தாண்டு சிறந்த அதிகாரிகள் ,அலுவலர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,ஆசிரியர்கள் உள்ளிட்ட மொத்தம் 127 நபர்களுக்கு விருதுகள் வழங்கி அவர்கள் சேவையை பெருமைப்படுத்தி உள்ளோம்..


விருதுக்காக உழைக்காமல் சமூக மாற்றத்துக்காக சுயநலமில்லாமல் உழைப்பவர்களை தேடிப்பிடித்து அவர்களை மேடை ஏற்றி அழகு பார்ப்பது  கல்வியாளர்கள் சங்கமம் தான்..இன்றைய சூழலில் அனைத்து தரப்பினர்களால் கவனிக்கப்படகூடிய மிகச் சிறந்த பொது மேடையாக உறுமாற்றம் பெற்றிருப்பது இவர்களது பணிக்கு கிடைத்த வெற்றியாகவே  கருதுகிறேன்..தற்பொழுது மது ஒழிப்பு,கல்வி முறை மாற்றம்,விவசாயத்தின் முக்கியத்துவம்,தாய்மொழியும் தமிழர் வாழ்வும்,நீர் மேலாண்மையும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் ,சட்ட விழிப்புணர்வும் பாதுகாப்பும் தனது குறிக்கொளாக கொண்டு கல்வியாளர் சங்கமம் தன்னுடைய பயணத்தை விரைவுபடுத்தியுள்ளது..இதில் தற்பொழெது தமிழகம் முழுவதும் இருந்து 600 க்கும் மேற்பட்ட தன்னார்வ ஆசிரியர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இணைந்து பணியாற்றி வருகின்றனர்..இவர்கள் அனைவரும் கையில் ஏந்தி இருப்பது சமூக மாற்றத்திக்கான சாட்டை ஆகும்.கல்விக்கு ஏதாவது உதவி செய்ய நினைக்கும் தன்னார்வ அதைப்புகள்,மிகப்பெரிய நிறுவனங்கள்,கல்வியாளர்கள் சங்கமத்தோடு கரம் கோர்த்தால் அது ஒரு மிகப் பெரிய பலனை இந்த சமூகத்திற்கு கொடுக்கும் என்றார்..விழாவில் எம்.ஏ.எம்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளர் எம்.ஏ.மாலுக் முகமது தொடக்க உரையாற்றானார்..மதுவில்லா தமிழகமும் போதை மீட்பும் என்ற தலைப்பில் புதுக்கோட்டை நகர்நல அலுவலர் மருத்துவர் யாழினி சிறப்புரையாற்றினார்..விழாவில் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து சாதனைபடைத்த அலுவலர்கள்,ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..இவண். கு.முனியசாமிM.A,B.Ed ஆசிரியர்,உருவம்பட்டி.அன்னவாசல் ஒன்றியம்.புதுக்கோட்டை மாவட்டம்

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்