சிபிஎஸ்இ, என்சிஇஆர்டிக்கு இணையாக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் : தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

நீட் போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) இணையாக மேம்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தேசிய அளவில் நடத்தப்படும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்ற போட்டித் தேர்வுகளுக்கும், மத்திய அரசு பாடத் திட்டங்களான சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி பாட திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

தமிழக பாட திட்டத்தின் கீழ் நன்றாக படிக்கும் மாணவர்களால் இந்த போட்டித் தேர்வுகளில் வெற்றியடைய முடியவில்லை எனக் கூறி, சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாட திட்டத்துக்கு இணையாக பாட திட்டத்தை மேம்படுத்த கோரி வக்கீல் மார்ட்டின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். 


இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன், நீதிபதி சேஷசாயி அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வாதிடும்போது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள், மாநில பாட திட்டத்தை சிபிஎஸ்இக்கு இணையாக மேம்படுத்தியுள்ளன.  

தமிழக பாடத் திட்டத்தை மேம்படுத்த கோரிய போது, அது மாநில அரசின் கொள்கை  சார்ந்த விஷயம் என்பதால் எதுவும் செய்ய முடியாது என்று வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தனர்.

Comments

  1. It should be same syllabus throughout India.... equal education and equal syllabus...

    ReplyDelete

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்