நீட்: பெரும்பாலான கேள்விகள் சிபிஎஸ்இயில் இருந்து கேட்கப்பட்டது.. மாணவர்கள் குமுறல்




நீட் தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதாக தமிழக மாணவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இது தற்போது இன்னும் பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது.

இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் , கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மோசமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த நீட் தேர்வு முடித்து மாணவர்கள் வெளியே வர துவங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் நீட் தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதாக தமிழக மாணவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். தேர்வு முடிந்து வெளியே வரும் மாணவர்கள் மிகுந்த சோகத்துடன் வந்துள்ளனர்.

சிலருக்கு தேர்வு எளிதாக இருந்ததாக கூறியுள்ளனர். மாநில பாடத்திட்ட கேள்விகள் வரவே இல்லை, குறைவாகத்தான் கேள்விகள் இருந்தது என்று மாணவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். முக்கியமாக இயற்பியல் பாடம் மிகவும் கஷ்டமாக இருந்ததாகவும், பயிற்சி எடுத்தது எல்லாம் வீணாகிவிட்டது என்று கூறியுள்ளனர்.

இந்த தேர்வை பொறியியல் படித்துக் கொண்டு இருக்கும் சில மாணவர்களும் விடா முயற்சியுடன் எழுதியுள்ளனர். ஒரு வருடம் பயிற்சி எடுத்தும் பலன் இல்லை என்று கூறியுள்ளனர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்