ஐந்தாண்டுகளில் இல்லாத தேர்ச்சி சாதனை : மதிப்பெண்ணை வாரி வழங்கிய தேர்வுத்துறை

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், வினாத்தாள் கடினமாக இருந்தபோதும், விடை திருத்தத்தில்,
மதிப்பெண்ணை வாரி வழங்கியதால், ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில், தேர்ச்சி சதவீதம் அதிகரித்து, அரசு தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது.



பத்தாம் வகுப்பு பொது தேர்வில், எந்த ஆண்டும் இல்லாத வகையில், வினாத்தாள் கடினமாக இருந்தது. தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் பல கேள்விகள், மாணவர்களின் அறிவு நுட்பத்தை சோதிக்கும் விதமாக இருந்தது. இது குறித்து, மாணவர்களும், ஆசிரியர்களும் அதிருப்தி தெரிவித்தனர். வினாத்தாள் கடினமாக இருந்ததால், தேர்ச்சி சதவீதம் மற்றும் மதிப்பெண்ணில் பாதிப்பு இருக்கும் என, கருதப்பட்டது.ஆனால், எந்த பாதிப்புமின்றி, மற்ற ஆண்டுகளை விட அமோகமான தேர்ச்சியும், மதிப்பெண்களும் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு, 10.01 லட்சம் பேர் எழுதிய தேர்வில், 2017ஐ விட, ஒரு சதவீதம் கூடுதலாக, 94.45 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. ஐந்தாண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தான் அதிக மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பில், 2014ல், 90.70 சதவீதம்; 2015ல், 92.90 சதவீதம்; 2016ல், 93.60 சதவீதம்; 2017ல், 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு, 94.45 சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.

இது குறித்து, தேர்வுத் துறையினர் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு தேர்வில் கடின வினாத்தாள் என, மாணவர்கள் புகார் செய்ததால், விடை திருத்த குறிப்பு, எளிதாக தயாரிக்கப்பட்டது. விடை திருத்தத்தில் கடினமாக நடந்து கொள்ள வேண்டாம்; அதிநுட்பமாக திருத்த வேண்டாம் என, ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டனர்' என்றனர்.

தேர்வு எழுதியோர் எண்ணிக்கை சரிவு : தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடுமையாக சரிந்துள்ளது. 2014ல், 9.26 லட்சம்; 2015ல், 9.85 லட்சம்; 2016ல், 9.47 லட்சம்; 2017ல், 9.26 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 2017ஐவிட, இந்தாண்டு, 28 ஆயிரத்து, 766 பேர் குறைவாக, 8.97 லட்சத்து, 945 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். இதற்கு, பள்ளிக்கல்வியை பாதியில் முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தான் காரணமா என்பதற்கான ஆய்வை, அதிகாரிகள் துவக்கிஉள்ளனர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்