ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பலாம் - தமிழக அரசு - அனுப்ப வேண்டிய முகவரி வெளியீடு

ஊதிய முரண்பாடு குறித்த மனுக்களை அரசு செயலாளர் சித்திக் குழுவிடம் மே 15ம் தேதிக்குள் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

*நேரிலோ, தபால் மூலமாகவோ, அல்லது omc_2018@tn.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு மே 15க்குள் அனுப்ப வேண்டும் - தமிழக அரசு

2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களை விட அதற்கு பின்னர் சேர்ந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைவான சம்பளமே கிடைப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். ஒரே கல்வி தகுதியுடன் ஒரே பணியை செய்து வரும் நிலையில் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையி்ல் தொடர்ந்து 4 நாட்களாக போராட்டம் நடத்திய நிலையில் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் ஊதிய முரண்பாடு குறித்த மனுக்களை நேரிலும், தபாலிலும், omc_2018@tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் அளிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மே 15ம் தேதிக்குள் ஒரு நபர் குழுவிற்கு மனுக்களை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஊதிய முரண்பாடுகளை களைய எம்.ஏ.சித்திக் அரசு செயலாளர் நிதித்துறை தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்