வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு துணைவேந்தர் அறிவிப்பு!!

வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தா் ராமசாமி அறிவித்துள்ளாா்*


*🔰கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தா் ராமசாமி இன்று செய்தியாளா்களை சந்தித்தா்ா. அப்போது அவா் கூறுகையில், வேளாண் பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளும், 4 தொழில் முறை பாடப்பிாிவுகளும் செயல்பட்டு வருகின்றன*


*🔰உறுப்பு கல்லூாிகளில் 987 இடங்களும், இணைப்பு கல்லூாிகளில் 2 ஆயிரத்து 160 இடங்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 147 இடங்கள் நிறப்பப்படுகிறது*


*🔰இந்த கல்வி ஆண்டு முதல் இணைய தளம் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான பிரிவில் விண்ப்பிப்போா் தேவையான சான்றிதழ்களை குறிப்பிட்ட நாட்களில் நேரில் கொண்டு வந்து சரி பாா்க்க வேண்டும்*



*🔰மேல்நிலை பள்ளி தோ்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு தரவரிசை பட்டியல் தயாாிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்*


*🔰மாணவா்கள் சோ்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும்*



*🔰வருகிற 18ம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள். அடுத்த மாதம் 17ம் தேதி கடைசி நாள் ஆகும்*



*🔰சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றுகள் சாிபாா்ப்பு அடுத்த மாதம் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறுகிறது*



*🔰தரவாிசை பட்டியல் அடுத்த மாதம் 22ம் தேதி வெளியிடப்படுகிறது. சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி நடைபெறுகிறது. 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை முதல்கட்ட ஆன்லை கலந்தாய்வு நடைபெறுகிறது*



*🔰16ம் தேதி தொழில் கல்விக்கான கலந்தாய்வும், 17, 18ம் தேதிகளில் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது*



*🔰23ம் தேதி முதல் 27ம் தேதி வரை 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி கல்லூரிகள் தொடங்கும் நிலையில் 31ம் தேதி வரை சோ்க்கை நடைபெறும் என்று அவா் தொிவித்துள்ளாா்*

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்