திட்டமிட்டபடி நாளை போராட்டம் : ஜாக்டோ-ஜியோ


திட்டமிட்டபடி நாளை கோட்டை முற்றுகை போராட்டம் நடக்கும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. நாளை சென்னையில் கோட்டை  நோக்கி போராட்டம் நடத்தப் போவதாக ஜாக்டோ-ஜியோ கடந்த வாரம் அறிவித்தது. இது குறித்து முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும்  ஜாக்டோ-ஜியோவின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் அவசரக் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. கூட்டத்துக்கு பின்  ஒருங்கிணைப்பாளர்கள் மீனாட்சி சுந்தரம், முத்துசாமி,அன்பரசு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து  செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டு வருதல், இடைநிலை ஆசிரியர்கள் உள்பட பல்வேறு தொகுப்பூதிய ஊழியர்களுக்கு கால  முறை ஊதியம் வழங்குவது, ஊதிய முரண்பாடுகளை களைவது மற்றும் அறிவிக்கப்பட்ட புதிய ஊதிய விகிதங்களின் 21 மாத நிலுவைத் தொகையை  வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை ஜாக்டோ-ஜியோ நடத்தி வந்த நிலையில், அரசு இந்த  அமைப்பை அழைத்து இதுவரை பேச்சு வார்த்தை நடத்தவில்லை. 


மேலும், ஊதிய  முரண்பாடுகள் களைய அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவின் பரிந்துரைகளை பெற்று அறிவிக்க அரசு நடவடிக்ைக எடுக்கவில்லை.  இதை கண்டித்தும், அமைப்பை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டும் கோட்ைட நோக்கி போராட்டம் நடத்துவது என்று  ஜாக்டோ-ஜியோ முடிவு செய்துள்ளது. 

இது குறித்து கடந்த வாரம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள்,  தலைமைச் செயலாளர்களை சந்தித்து நோட்டீஸ் கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. அதனால்  திட்டமிட்டபடி நாளை  தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடக்கும். இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்