பலாப்பழம் சாப்பிட்டால் இந்த நோய்களை தீர்க்கலாம்


பலாப்பழத்தில் ஜிங்க், இரும்பு சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம், ரிபோப்லாவின், வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக பலாப்பழத்தில் நார்ச்சத்துக்கள் உள்ளது.

பலாப்பழம் சாப்பிடுவதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் குறைகிறது, மன அழுத்தம் குறைகிறது, இரத்த சோகை குறைகிறது மற்றும் கண் பார்வை மேம்படுகிறது.

1. செரிமானத்தை மேம்படுத்துகிறது:

வயிற்று பிரச்சனைகள் உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிட்டால் அனைத்து பிரச்சனைகளும் குறையும். பலாப்பழம் மலச்சிக்கல் மற்றும் அல்சர் பிரச்சனையை குறைக்கிறது.

2. முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை குறைக்க உதவுகிறது :

பலாப்பழத்தை நன்றாக அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள சுருக்கம் குறைகிறது. பலாப்பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம். 15 - 30 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

3. ஆஸ்துமா குணப்படுத்துகிறது:

நீரில் பலாப்பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டவும், வடிகட்டிய நீரை குடிப்பதால் ஆஸ்துமா குணப்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு நிச்சயம் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

Comments