ஜூன் முதல் வாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தொடங்கவுள்ளது.

புதிய பாடத்திட்டம் குறித்து, ஜூன் முதல் வாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தொடங்கவுள்ளது.


இந்தப் பயிற்சியின்போது பாடநூல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம், கற்பித்தலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்படும்.

தற்போது தங்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் முழுவதுமாக முடிவடைந்ததும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக புதிய பாடத் திட்டம் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்