அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து சம்பளம், பணியிட விவரங்களை சேகரிக்கும் எம்.ஏ.சித்திக் குழு ஜூலையில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டம்

அரசுசெலவினங்களை குறைக் கும் நோக்கில் அமைக்கப்பட்டபணியாளர் சீரமைப்புக் குழு, துறைகள் தோறும் பணியாளர்கள், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறது. 

தமிழக அரசில் தற்போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசின்ஒட்டுமொத்த வருவாயில் 70 சதவீதம் ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியமாக வழங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, வருவாய் செலவினங்களைக் குறைக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, அரசுப் பணிகளில் தேக்கத்தை குறைக்கவும்தேவையில்லாத பணியிடங்களை நீக்கவிட்டு, தேவை யானபணியிடங்களில் புதியவர்களை நியமிக்கவும் சில பணியிடங்களில்அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்கவும் அரசுமுடிவெடுத்தது. இதையடுத்து, நிதித் துறை (செலவினம்) செயலாளர்எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒரு நபர்பணியாளர் சீரமைப்புக் குழுவைஅரசு அமைத்தது. 

ஆனால், இந்தக் குழுவுக்கு அரசு ஊழியர்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் சித்திக்குழு தனதுபணிகளைத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, துறைதோறும்உள்ள பணியிடங்கள், பணியா ளர் எண்ணிக்கை உள்ளிட்டவிவரங்களைச் சேகரித்து வருகிறது.


இதுதொடர்பாக அரசுத்துறைகள், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் உட்படஅனைத்து துறைகளின்செயலர்களுக்கும் குழுவின் தலைவர் சித்திக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘தேவையில்லாத பணியிடங்களைக் குறைத்து, அவுட்சோர்சிங்அல்லது ஒப்பந்த அடிப்படையில் தேவையான பணியாளர்களைநியமிக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

எனவே, தங்கள் துறைகளில் உள்ள நிர்வாகச் செலவினங்கள், பணியாளர்கள், பணியிடங்கள் குறித்த விவரங்களைத் தரவேண்டும்’ என கோரியுள்ளது. மேலும், துறைகளின் தலைவர்கள், அந்தந்ததுறைகளில் நிர்வாகச் செலவுகளை குறைக்க எடுக்க வேண்டியநடவடிக்கை கள் குறித்த பரிந்துரைகளையும் தருமாறுதெரிவித்துள்ளார்.


 தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை, பணியாளர் நலன் மற்றும்நிர்வாக சீர்திருத் தத் துறையிடம் இருந்து தலை மைச் செயலகத்தில்பணியாற்று வோர் விவரங்கள், காலிப் பணியிடங்கள், ஊழியர்களின்சம்பளம் உள்ளிட்ட விவரங்களைக் கோரியுள்ளது. இதற்காக 15 கேள்விகள் அடங்கிய பட்டியலையும் துறைகளுக்கு அனுப்பியுள்ளது. இந்த பணியாளர் சீரமைப்புக்குழு, தனது பணிகளை நிறைவு செய்து, வரும் ஜூலையில் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்யும் எனகூறப்படுகிறது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்