நீட் தேர்வு எழுத சீக்கிய மாணவர்கள் தலைப்பாகையுடன் செல்லலாம் : உயர் நீதிமன்றம் அனுமதி

நீட் தேர்வு எழுதும் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை மற்றும் கிர்ப்பான் உடன் தேர்வு அறைக்குச் செல்ல டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் பரிசோதனைக்காக ஒரு மணி நேரம் முன்பாகவே செல்ல அறிவுறுத்தியுள்ளது.


கடந்த ஆண்டு கடுமையான பரிசோதனை முறைக்குப் பின்பு, மாணவர்கள் தேர்வறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டன. எனவே தேர்வறை விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். நல்ல உடை, தேவையான சாதனங்கள், சான்றுகளை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்.

இதுவரை மாநில அரசு கல்லூரிகள், மத்திய அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், சில பல்கலைக்கழகங்கள் தனித்தனியே தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடத்தின. இப்போது நாடு முழுவதும் ஒரே தேர்வாகிவிட்டதால் இந்தியா முழுவதுமுள்ள கல்லூரிகளிலும், புகழ்பெற்ற மருத்துவ கல்லூரிகளிலும் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்