பிஎச்.டி., முடித்தவர்களுக்கே உதவி பேராசிரியர் வேலைகல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கு, பிஎச்.டி., எனப்படும், ஆய்வுப் படிப்பு, 2021 முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயர் கல்வியில் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு, 'நெட்' எனப்படும் தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற, முதுகலை பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

பிஎச்.டி., எனப்படும் ஆய்வுப் படிப்பு முடித்தவர்களுக்கு, 'நெட்' தேர்வு தேவையில்லை. ஆனால், உயர்கல்வி தரத்தை மேம்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, உதவிப் பேராசிரியர் பணிக்கான, கல்வித் தகுதியையும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஏழாவது ஊதியக்குழு தலைவர், வி.எஸ்.சவுகான்,'பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதியாக, பிஎச்.டி.,யை நிர்ணயிக்கலாம்' என, தன் பரிந்துரையில் கூறியிருந்தார்.

இதையடுத்து, 2021ம் ஆண்டு முதல், உதவிப் பேராசிரியர் பணிக்கு, எனப்படும் ஆய்வுப்படிப்பை, கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்