ஆன்ட்ராய்டு பி பீட்டா இன்ஸ்டால் செய்தவர்கள் இதையும் செய்து விடுங்கள்.!




அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற கூகுள் I/O 2018 நிகழ்வில் ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தின் பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டது.
ஐபோன் X போன்ற நாட்ச் சப்போர்ட், ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்கள் என புதிய இயங்குதளத்தில் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

முன்கூட்டியே இந்த இயங்குதளத்தை பயன்படுத்த விரும்புவோருக்கு இதன் பீட்டா தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. பீட்டா இயக்குதளத்தை ஒருமுறை பயன்படுத்தியவர்கள் மீண்டும் ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்துக்கு செல்ல நீங்கள் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போனினை முழுமையாக அழிக்க வேண்டும். ரிஸ்க் எடுக்க அஞ்சாதவர்கள் ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் மாற்ற வேண்டிய சில செட்டிங்-களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜெஸ்ட்யூர்கள் (Gestures)

ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் வாடிக்கையாளர்கள் நேவிகேட் செய்ய வழக்கமாக பயன்படுத்தும் வழிமுறையை தவிர்த்து ஜெஸ்ட்யூர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இத்துடன் இந்த அம்சத்தை நீங்களாகவே செட்டப் செய்ய வேண்டும். இதனை செட்டப் செய்ய செட்டிங்ஸ் ஆப் சென்று சிஸ்டம் ஜெஸ்ட்யூர்ஸ் -- ஹோம் பட்டனில் ஸ்வைப் அப் செய்ய வேண்டும். மேல் வரும் திரையில் ஹோம் பட்டனில் எனேபிள் செய்யக் கோரும் இடத்தில் ஸ்வைப் அப் செய்ய வேண்டும்.

இனி ஹோம் பட்டனில் ஸ்வைப் அப் செய்தாலே சமீபத்தில் நீங்கள் பயன்படுத்திய செயலிகளை பார்க்க முடியும். ஹோம் பட்டனில் வேகமாக வலது புறம் ஸ்வைப் செய்தால் இரண்டு செயலிகளிடையே மாற முடியும். ஹோம் பட்டனை மெதுவாக ஸ்வைப் செய்தால் சமீபத்திய செயலிகளை ஸ்கிரால் செய்ய முடியும். செயலிகளை பார்க்காமல், ஹோம் ஸ்கிரீன் செல்ல ஹோம் பட்டனை தட்ட வேண்டும்.

ஆக்ஷன் சஜெஷன்ஸ் (Action suggestions)
ஆன்ட்ராய்டு இயங்குதளம் முன்பை விட அதிக ஸ்மார்ட் அம்சங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் ஜெஸ்ட்யர் எனேபிள் செய்யப்பட்ட புதிய ஹோம் ஸ்கிரீனினை ஸ்வைப் செய்தால் உங்களது பயன்பாட்டுக்கு ஏற்ப ஐந்து செயலிகள் திரையில் பட்டியலிடப்படும். இவை உங்களின் பயன்பாட்டை வைத்து பரிந்துரைக்கப்பட்டவை ஆகும். இதேபோன்று ஆப் டிரயாரில் சில பொதுவான ஆப்ஷன்களுக்கு கவனிக்கத்தக்க ஆக்ஷன் பட்டன்கள் காணப்படும். இவற்றை கொண்டு செயலிகளின் குறிப்பிட்ட பகுதியையோ அல்லது மெசேஜ் அனுப்பவோ முடியும். இவற்றில் ஏதேனும் புதிய அம்சங்கள் தேவையற்றதாகவோ அல்லது வியப்பாகவோ தெரிந்தால் அதனை உடனடியாக டிசேபிள் செய்து விடலாம்.

டூ நாட் டிஸ்டர்ப் (Do Not Disturb)
வாடிக்கையாளர்கள் அதிகளவு ஸ்மார்ட்போன் திரையை பார்த்து கொண்டிருப்பதை குறைக்கும் நோக்கில் ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் டூ நாட் டிஸ்டர்ப் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் இந்த அம்சத்தை ஆன் செய்ததும், அழைப்புகள், நோட்டிஃபிகேஷன் உள்ளிட்டவற்றை மட்டும் தடுக்காமல், டிஸ்ப்ளேவினை ஆன் செய்ய விடாது. இந்த அம்சத்தை கூகுள் விஷுவல் டிஸ்டர்பன்ஸ் என அழைக்கிறது.

இதன் செட்டிங்களில் நோட்டிஃபிகேஷன் லைட் பிளாக் செய்வது, ஸ்கிரீனினை ஆன் செய்வது, ஸ்கிரீன் ஆஃப் ஆகியிருக்கும் போது வரும் நோட்டிஃபிகேஷன்களையும் தடுக்கும். ஸ்கிரீன் ஆன் செய்யப்பட்டிருந்தால், நோட்டிஃபிகேஷன் டாட்கள் மறைக்கப்பட்டு, நோட்டிஃபிகேஷன் பட்டியலில் இருந்து எவ்வித தொந்தரவும் இல்லாமல் பார்த்து கொள்ளும்.
இதனை இயக்க செட்டிங்ஸ் -- ஆப்ஸ் & நோட்டிஃபிகேஷன்ஸ் -- டூ நாட் டிஸ்டர்ப்
பிளாக் விஷுவல் டிஸ்டர்பன்சஸ் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!