ஆசிரியர் பணி நிரவல் ஆணை அரசு திரும்பப் பெற கோரிக்கை

தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அந்த  கூட்டத்துக்கு பிறகு  பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் மாயவன் கூறியதாவது: 


பள்ளிக் கல்வித்துறையானது, தேவையற்ற அரசுப்  பணியிடங்களை குறைப்பதற்காக சீராய்வுக் குழு ஒன்றை சமீபத்தில் தமிழக அரசு அமைத்துள்ளது.

அந்த குழு தனது பணியை தொடங்கி பரிந்துரையை  அரசுக்கு கொடுப்பதற்கு முன்பே பள்ளிக் கல்வித்துறையில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்களை உபரி இடங்கள் என்று காட்டி பல வகுப்புகளை ரத்து  செய்யவும், பல பள்ளிகளை மூடவும் செயல்படத் தொடங்கியுள்ளது.


இதை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் கடுமையாக கண்டிக்கிறது. பள்ளிகளில் ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை மாற்றி அனைத்து  பாடங்களையும் போதிக்க மொத்தமே 2 அல்லது 3 ஆசிரியர்களை நியமிக்க பணி நிரவல் ஆணை உதவுகிறது. 

இதனால் கிராமப் புற மாணவர்கள்  பாதிக்கப்படுவார்கள். மாணவரின் கல்வி உரிமையை பறிக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் உத்தரவை கல்வித்துறை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் ெ தரிவித்தார்.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்