முலாம்பழத்தின் ஜூஸ் குடிங்க - ஆரோக்கியமா இருங்க!



நீர் சத்து அதிகம் உள்ள பழங்களில் முலாம்பழமும் ஒன்றாகும்.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்க அனைவரும் விரும்பும் பழம் என்றால் அது முலாம்பழம்.


உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது முலாம்பழம். இது மலச்சிக்கல் உள்ளவர்கள் பெரிதும் உதவுகிறது.


நீர்க்கடுப்பு உள்ளவர்கள் முலாம்பழத்தின் விதைகளை சாப்பிடுவதால் நீர்க்கடுப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இதில் புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் சத்து போன்றவை அதிகம் உள்ளது.



இப்பழத்தை அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.

மூலநோய் உள்ளவர்கள் முலாம்பழம் சாப்பிடுவதால் குணப்படுத்தலாம்.



சரும நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது மற்றும் பித்தத்தை முற்றிலும் குறைக்கும் தன்மை கொண்டது.

இப்பழத்தை அரைத்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் கல்லீரல் நோய் குணமாகும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவ்வாறு உட்கொண்டால் வாய்ப்புண் மற்றும் குடல் புண்ணை ஆற்றும்.

Comments