அரசுப்பள்ளிகளில் மாணவர் குறைய யார் காரணம்??? ஆசிரியர்களா?

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர 1.32 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கோட்டூர்புரத்தில் பேட்டி அளித்தார்.


அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்


தனியார் பள்ளிகளில் 25%இடங்களை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு உத்தரவு போட்டது.


இதன் காரணமாக 1,32,000 ஏழை மாணவர்கள் இலவசமாக தனியார் பள்ளியில் கல்வி பெறப்போகிறார்கள்...

இவ்வளவு மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியதன் மூலம் கஷ்டப்பட்டு படித்து டெட் தேர்ச்சி பெற்று பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு அரசு பட்டை நாமம் போட்டுள்ளது..

30மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் 4,400 ஆசிரியர் பணியிடங்கள் போட்டிருக்க வேண்டும்..

அனைத்தும் தனியார் மயமாக்கி விட்டு அப்புறம் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது வருத்தம் அளிக்கிறது.

கேரளாவில் தனியார் பள்ளிகள் அரசுடமையாக்கப்பட்டு வருகிறது, ஆனால் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு தனியார் வசம் சென்றடைகிறது.


பள்ளிகளை மூடினால் தனியார் பள்ளிகளுக்கு மகிழ்ச்சி. இதுதான் அரசின் போக்கு என்பது நியாயம் இல்லை.

பிள்ளைகள் இல்லாத பள்ளிகளை உயர் அதிகாரிகள் வரை தனி கவனம் செலுத்தி அந்த பள்ளிக்கு திறமையான ஆசிரியர்களை நியமித்து தனி சலுகைகள் கொடுத்து வாழ வைக்க தெரியாமல் மூட நினைப்பது நொண்டி குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்பதே பொருந்தும்.

பிள்ளைகள் இல்லாத பள்ளி உள்ள ஊர் மக்களை திரட்டி பள்ளிகளை செம்மைபடுத்த எந்த உயர் அதிகாரியாவது நினைத்ததுண்டா அதுபோல் கூட்டம் போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தந்த்துண்டா. இல்லையே. ஆசிரியர்களை மட்டுமே குறை கூறுவார்கள்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்தால் மகிழ்ச்சி என்று கூறும் மாண்புமிகு கல்வி அமைச்சர் ஏன் MLA கள் மற்றும் அமைச்சர்களின் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்தால் மகிழ்ச்சி என்று கூறவில்லை.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்