பள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்

*முதலில் பணி நிரவல் தொடர்ந்து பணியாளர் எண்ணிக்கை குறைப்பு என வந்த வண்ணம்* *இருக்கும். 

*தற்போதுஆசிரியர்களின் பாடப் பிரிவேளைகள்** *தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் வெளியிட்ட ஆணை ஒரு முன்னோட்டம். அந்த ஆணையில் ஓர் ஆசிரியர் வாரத்திற்கு* *28 பிரிவேளைகள் எடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி* *முதுகலையாசிரியர்கள் கீழ்நிலை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டுமாம்.*

*அவ்வாறு முதுகலையாசிரியர்கள் கீழ்நிலை வகுப்புகளுக்கு வருவார்களேயானால், அவர்கள் கையாளும் பிரிவேளைகள்* *கணக்கில் கொள்ளப்பட்டு ஏராளமான பட்டதாரி ஆசிரியர்* *பணியிடங்கள் உபரியாகக் காட்டப்பட்டு பணி நிரவல் என்ற பெயரில் பட்டதாரி* *ஆசிரியர்கள் பந்தாடப் பட இருக்கிறார்கள். அதைப் பற்றி யாரும் இன்னும் சிந்திக்காமல் இருப்பது வேதனை* *அளிக்கிறது* .

*ஒரு வேளை முதுகலை ஆசிரியர்கள் கீழ்நிலை* *வகுப்புகளைக் கையாள்வார்களேயானால்* , *அதையே காரணமாக வைத்து நீதிமன்றத்திற்குச்* *சென்று நிச்சயம் உயர்நிலைப் பள்ளி* *தலைமைசிரியர் பதவி உயர்வில் பங்கு வாங்கிவிடுவார்கள்** .

*ஏற்கனவே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்* *பதவி உயர்வானது அதே தொகுதியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படாமல், ஒரு பதவி உயர்வினை அனுபவித்து விட்டு பணப்பலனையும் பெற்றுவிட்டு எங்கேயோ பணியாற்றிக் கொண்டிருக்கும் முதுகலையாசிரியர்களுக்கு கூவி கூவி பள்ளிக் கல்வித்துறை வழங்கி பட்டதாரி ஆசிரியர்களின்* *வயிற்றில் அடித்துக் கொண்டு வருகிறது* .


*இவ்வாறு செய்வதின் காரணமாக தற்போதுள்ள சுமார் 65000 பட்டதாரி* *ஆசிரியர்களில் 40000 க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு எதுவுமே இல்லாமல் ஓய்வு* *பெறும் நிலை உறுதியாகிறது.*

*சமீபத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்ட ஆணை* *நடைமுறைப் படுத்தப்பட்டால் 90 சதவீதம் அதாவது 50000க்கும் மேற்பட்ட* *பட்டதாரி ஆசிரியர்கள் அதே நிலையில் இருந்து ஓய்வு பெறுவது உறுதி.*

*எது எப்படியோ, நசுக்கப்படுவது பட்டதாரி ஆசிரியர் பணித் தொகுதி* .

*பட்டதாரி ஆசிரியர் பணித் தொகுதிக்கென ஏகப்பட்ட அமைப்புகள்* *உள்ளன* .

*ஆனால், ஒரு அமைப்பு கூட இதுவரையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப்* *பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை வழங்க வேண்டும் என அறிக்கை விடவில்லை* . *கோரிக்கை வைக்கவில்லை.* 


*மாறாக பழையபடியே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை வழங்க வேண்டும் என* *முதுகலையாசிரியர்களுக்கே வக்காலத்து வாங்கும் வகையில்* *கூட்டாகக் கையொப்பமிட்டுத் தருகின்றன.*


*தற்போது பணி நிரவல் தொடர்பாக இயக்குநரின் ஆணையை எதிர்த்து எந்த அமைப்பும் குரல்* *கொடுக்கவில்லை* .


*இதுதான் தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.*

*மிகப்பெரிய போராட்டங்களில் தத்தமது இயக்க வலிமையைக் காட்டிக் கொள்வதிலும்,* *இயக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதும் மட்டுமே தற்போது பெரிய* *இயக்கங்களுக்கு உள்ள நிலைப்பாடு.*

*சி.பி.எஸ், ஊதிய முரண்பாடு ஒரு பக்கம் இருக்கட்டும்.*

*உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு* *மட்டுமே என்ற நிலை எப்போது வரும் என்ற கேள்விக் கணைகளை* *அவரவர் இயக்கத் தலைவர்களின் பால் தொடுக்க வேண்டும்.*

*மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே மாற்றங்கள்* *கிடைக்கும்*.

*இல்லையேல் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே.*

Comments

  1. Cps ஒழிப்பை விட ஒரு ஊக்க ஊதியம் தரும் H.m பதவி உயர்வு முக்கியமா??????

    ReplyDelete
    Replies
    1. இரண்டும் முக்கியம் தான். அதில் செலுத்துகின்ற கவனம் இதிலும் செலுத்தப்பட வேண்டும் என்பதே இங்கு சொல்லப்பட்ட கருத்து

      Delete

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!