பாலிடெக்னிக் தேர்வு முடிவு வருவதில் சிக்கல்

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், விடைத்தாள் திருத்துவதை புறக்கணித்து போராடுவதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

பாலிடெக்னிக் மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்துவது, மாநிலத்தில், 30 மையங்களில் நடக்கிறது. இப்பணி, மே 7ல் துவங்கி, 12 ல் முடிக்க வேண்டும்.வழக்கமாக, மே 20ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணியில், 5,500 விரிவுரையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.விரிவுரையாளர்கள், 'சம்பள உயர்வு, விடைத்தாள் ஊதியத்தை அதிகரித்து வழங்க வேண்டும்' எனக்கோரி, நேற்று பணியை புறக்கணித்தனர்.திண்டுக்கல், ஆர்.வி.எஸ்., பாலிடெக்னிக்கில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. நேற்று பணியை புறக்கணித்து விரிவுரையளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விரிவுரையாளர்கள் கூறியதாவது:பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 2008 க்கு பிறகு ஊதிய உயர்வில்லை.ஒரு நாளில், 50 விடைத்தாள் திருத்த வேண்டும். தாள் ஒன்றுக்கு, ஏழு ரூபாய் வழங்கப்படுகிறது. இது பஸ் போக்குவரத்திற்கு கூட கட்டுப்படியாவது இல்லை. ஒரு தாளுக்கு, 20 ரூபாய் வழங்க வேண்டும். அதுவரை விடைத்தாள் திருத்த மாட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்