9-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி: செங்கோட்டையன்
9-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச விரைவில் பயிற்சியளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 9-ம் வகுப்பு மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வழங்கப்படும் என்றார்.
லண்டன், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளிலிருந்து சிறந்த கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் பேச 6 மாத காலத்திற்கு இந்த பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
Comments
Post a Comment