கனமழை….பலத்த காற்று…. அடுத்த 5 நாட்களுக்கு தமிழநாட்டில் இது தான்…. உறுதியாக சொன்ன இந்திய வானிலை ஆய்வு மையம்

கனமழை….பலத்த காற்று…. அடுத்த 5 நாட்களுக்கு தமிழநாட்டில் இது தான்…. உறுதியாக சொன்ன இந்திய வானிலை ஆய்வு மையம்…



கேரளா அருகே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகதமிழகம், கேரளா, கர்நாடகாஉள்ளிட்ட மாநிலங்களில், அடுத்த 5 நாள்களுக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்தே கடுமையான வெளில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் பலத்த காற்றுடம் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது.

நேற்று திருச்சி, மதுரை, விருதுநகர், பெரம்லூர், திண்டுக்கல், தேனி, நாகைஉள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது, இதனால் சற்று குளிர்ச்சி நிலவியது.இதனிடையே கேரளாவையொட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில்  மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் தமிழகத்தின் வழியாக செல்லும் எனவும் , இதனால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்,  பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வரும் 28 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் தொடர்வதால் கடும் வெயிலை சமாளிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த தமிழக மக்களுக்கு, வரும் 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்