ஒரே ரீசார்ஜ் 3 நம்பருக்கு டேட்டா: ஃபேமிலி பிளான் ஆஃபர்!


பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபகாலத்தில் பல அதிரடி
சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பிஎஸ்என்எல் ஃபேமிலி பிளான் ஆஃபரை வழங்கியுள்ளது.

இது பிராட்பேன்ட் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இன்டர்நெட் மட்டுமில்லாமல் மொபைல் டேட்டா சேவையும் வழங்கபப்டுகிறது. ரூ.1,199 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகை ஃபேமிலி பிளான் என அழைக்கப்படுகிறது.

இந்த பிஎஸ்என்எல் சலுகையில் 10Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பு மற்றும் பிஎஸ்என்எல் பிரீபெயிட் கனெக்ஷன்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இந்த சலுகையில் ரீசார்ஜ் செய்யும் போது வாடிக்கையாளர்கள் மூன்று பிஎஸ்என்எல் எண்களை தேர்வு செய்யலாம். தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு சிம் கார்டிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

இந்த சலுகையின் கீழ் வழங்கப்படும் டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் மூன்று பிஎஸ்என்எல் எண்களில் ஒன்றுக்கு மட்டும் இலவச ஆன்லைன் டிவி சேவை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!