மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக நீட் தேர்வு எழுதியவர்களிடம் முறைகேடு - 3 பேர் கைது

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதியவர்களிடம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக மோசடி செய்த 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.


மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக நீட் தேர்வு எழுதியவர்களிடம் முறைகேடு - 3 பேர் கைது
புதுடெல்லி:

நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்ற அடிப்படையில், மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வாக நீட் அறிவிக்கப்பட்டது. கடந்த 6-ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள 136 நகரங்களில் 2,255 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 13 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வு எழுதியவர்களிடம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக நடைபெற்ற மோசடி குறித்து சிபிஎஸ்சி புகார் அளித்திருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் மோஹித் குமார், மனோஜ் குமார், அஷ்வானி தோமர் ஆகிய 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களின் அலுவலகத்தில் சோதனை செய்த போது, கல்வி சான்றிதழ், நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டு, நிரப்பப்படாத காசோலைகள், கல்லூரிகளின் ரப்பர் ஸ்டாம்ப் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரி அபிஷேக் தயால் தெரிவித்துள்ளார்

Comments