ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் - Important Points Highlights
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 403-ல் தொடக்கக் கல்வித்துறை சார்ந்து வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளை இங்கு காண்போம்!
4 நிலைகளில் மாறுதல் நடைபெறும்
ஒன்றியத்திற்குள்
(புதிய) கல்வி மாவட்டத்திற்குள்
மாவட்டத்திற்குள் (கல்வி மாவட்டங்களிடையே)
மாவட்டம் விட்டு மாவட்டம்
மாறுதல் வழங்கும் அதிகாரம்
ஒன்றியம் & கல்வி மாவட்டத்திற்குள் : மாவட்டக் கல்வி அலுவலர்
மாவட்டத்திற்குள் : முதன்மைக்கல்வி அலுவலர்
மாவட்டம் விட்டு மாவட்டம் : இயக்குநர்.
சிறப்பு முன்னுரிமையில் பகுப்பு
50% & அதற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளி (IV)
50%-க்கு கீழுள்ள மாற்றுத்திறனாளி (VII)
1.6.18-ல் 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (V)
5 வருடங்களுக்குக் கீழ் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (VIII)
1.6.18-ல் ஒரே பள்ளியில் குறைந்தது *5 ஆண்டுகள் / அதற்கும்மேல்* பணிபுரிந்தோர் (X)
பிற முக்கிய கூறுகள்
1.6.2017-க்கு முன் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும்.
1.6.2017-ற்குப் பின் தன் இணையை இழந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கலாம்.
மாறுதல் பெறுவோர் இனி குறைந்தது 3 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும்.
2017-18-ல் பணிநிரவல் செய்யப்பட்டோருக்கு அனுமதி உண்டு.
2018-19 முதல் முன்னுரிமை விபரம் மாறுதல் ஆணையில் இடம் பெறும்.
இணையர் உரிமை (SPOUSE) (XI) கோருவோர் தமது இணை பணியாற்றும் மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மலைச் சுழற்சி நடைபெற வேண்டும்.
அலகு விட்டு அலகு இல்லை.
மாநிலச் சராசரிக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ள மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்குவதைத் தவிர்ப்பதோடு, மாறுதல் & பதவி உயர்வில் வெளிமாவட்டங்களில் இருந்து அம்மாவட்டங்களுக்கு நிரப்புதல் வேண்டும்.
ஈராசிரியர் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படும் வரை பணிவிடுவிப்பு இல்லை.
வழக்கத்திற்கான மாற்றம்
நிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.
Comments
Post a Comment