நாளை பிளஸ் 2, 'ரிசல்ட்' 2ம் ஆண்டாக, 'ரேங்கிங்' முறை ரத்து

தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு, நாளை(மே 16) வெளியாகிறது. தொடர்ந்து, இரண்டாம் ஆண்டாக மாணவர்களின், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2,ரிசல்ட்,2ம் ஆண்டாக,ரேங்கிங் முறை,ரத்து

தமிழக பாடத் திட்டத்தில், இதுவரை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பொது தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் சேர்த்து, பொது தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகள் அனைத்தும், ஏப்ரலில் முடிந்தன. ஏப்., 11 முதல் விடை திருத்தம் நடந்தது. இதில், பிளஸ் 2 விடை திருத்தம் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடிந்துள்ளன.

தேர்வு முடிவுகள், நாளை திட்டமிட்டபடி வெளியாகின்றன. மாணவர்கள் வழங்கிய மொபைல் போன் எண்ணில், தேர்வு முடிவுகள், எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்படும்.

அதேபோல், பள்ளிகளுக்கும், இ - மெயில் வழியாக, தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன. மாணவர்கள், தங்கள் தேர்வு முடிவுகளை, www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரிகளிலும் தெரிந்து கொள்ளலாம்.


வழக்கமாக, மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்கள், அவர்களின் பெயர், ஊர் மற்றும் படித்த பள்ளியின் விபரங்களை, தேர்வுத்துறை வெளியிடும். பள்ளி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் தேர்ச்சி விபரங்களை, பள்ளிகள் அறிவிக்கும். அந்த மாணவர்களுக்கு, வாழ்த்து, பாராட்டு மற்றும் பரிசு வழங்கப்பட்டு வந்தது.

இந்த, 'ரேங்கிங்' முறையால், பெற்றோர் மற்றும் உறவினர்களின் அழுத்தம் அதிகரித்து,

மாணவர்களுக்கு, பல்வேறு மன அழுத்த பிரச்னைகள் ஏற்பட்டன. பல மாணவர்கள், ரேங்கிங் கிடைக்காததால், விபரீத முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு முடிவு கட்டும் வகையில், 2017 முதல், பொது தேர்வுகளில், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டும், ரேங்கிங் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தனிப்பட்ட மாணவரின் ரேங்க் பட்டியலை வெளியிட்டு, பள்ளிகள் விளம்பரம் செய்யவும், பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்