ஜூன் 1 முதல் மாணவர்கள் புதிய நிற சீருடையில் பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக்கல்வி துறை உத்தரவு

* ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்த உத்தரவு


 ஜூன் 1ம் தேதி முதல் அரசு பள்ளியில் படிக்கும் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் புதிய நிற சீருடையில் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரே வகையான வகுப்புகளுக்கு ஏற்றவாறு புதிய நிறத்தில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

2018-19ம் கல்வியாண்டு முதல் 9ம் மற்றும் 10ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு சாம்பல் நிற வண்ணத்தில் முழு கை சட்டையும், இளஞ்சிவப்பு நிற கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு கூடுதலாக இதன்மேல் சாம்பல் நிற கோட்டும் அணிய வேண்டும். 

11ம் மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கருநீல நிற வண்ணத்தில் முழு கை சட்டையும், கருநீலநிறக் கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு கூடுதலாக இதன் மேல் கருநீலநிறக் கோட்டும் அணிய வேண்டும்.


இந்த சீருடைகள் வரும் 1ம் தேதி பள்ளி திறக்கும் நாள் அன்று அனைத்து மாணவ, மாணவிகளும் அணிந்து வர வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 

பள்ளிக்கல்வி துறை சார்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சீருடை மாதிரிகள் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சீருடைகள் இரண்டு செட் பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும். பள்ளி சீருடைகளை பொறுத்தவரை அரசு தெரிவித்தப்படிதான் சீருடை இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்