ரூ.125-க்கு டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்
ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் இந்திய டெலிகாம் சந்தையின் முன்னணி நிறுவனங்கள் கடும் நெருக்கடி சூழலுக்கு தள்ளப்பட்டன. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள புதிய சலுகைகளையும், பழைய சலுகைகளில் கூடுதல் சேவைகளை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை ஏர்டெல் அறிவித்துள்ளது. ரூ.125 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச ஹெல்லோ டியூன்களை வழங்குகிறது.
28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ரூ.125 பிரீபெயிட் சலுகையில் வழங்கப்படும் ஹெல்லோ டியூன்கள் வாடிக்கையாளர்கள் வழக்கமான ரிங்டோனுக்கு பதிலாக அவர்கள் தேர்வு செய்யும் பாடல்களை ஒலிக்க செய்ய முடியும். இத்துடன் இந்த சலுகையில் இலவச தேசிய ரோமிங் வழங்கப்படுகிறது.
புதிய ரூ.125 சலுகையானது ஏர்டெல் கடந்த வாரம் அறிவித்த ரூ.219 சலுகையின் பட்ஜெட் பேக் போன்று இருக்கிறது. முந்தைய ரூ.219 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 1.4 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால், இலவச ரோமிங், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ.125 சலுகை முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் வழங்கப்படும் நிலையில், விரைவில் இந்த சலுகை மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவும் இதேபோன்ற சலுகையை ரூ.99க்கு வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.99 சலுகையில் 2 ஜிபி டேட்டா, அனலிமி்ட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. எனினும் ஜியோ சலுகையில் ஹெல்லோ டியூன் சேவை வழங்கப்படவில்லை.
Comments
Post a Comment