முந்துங்கள்! Reliance Jio-வின் அதிரடி சலுகை பெறுவது எப்படி.?

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவையை வழங்கி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, தற்போது ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து ஜனவரி 26-ம் தேதி வழக்கமான சலுகையில் மாற்றம் செய்திருந்தது. சில பிளான்களின் விலையை 50 ரூபாய் குறைத்து சில பிளான்களின் டேட்டா அளவை அதிகரித்திருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் மிகவும் குறைவான விலையில் டேட்டா பேக்குகளை அறிவித்திருக்கிறது.இந்த திட்டத்தின் வழியாக கிட்டத்தட்ட எல்லா ஐபில் போட்டிகளையும் உங்களால் லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும். ஜியோ கிரிக்கெட் சீசன் பேக் ஆனது ரூ.251/-என்கிற மதிப்பை கொண்டுள்ளது.இது செல்லுபடியாகும் காலத்திற்குள் மொத்தம் 102 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

இந்த திட்டம் எப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பது பற்றிய ​விவரங்களை ஜியோ இன்னும் அறிவிக்கவில்லை.இருப்பினும் இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் 51 நாட்கள் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட் சீசன் பேக் உடன், மேலும் இரண்டு புதிய முயற்சிகளை ஜியோ அறிவித்துள்ளது.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!