அரசுப்பள்ளியில் நடந்த சூரியன் FM ரேடியோ வின் "அச்சம் தவிர்" விழிப்புணர்வு நிகழ்ச்சி


"அச்சம் தவிர்"
சூரியன் FM ரேடியோ  வழங்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி (2/4/18  )திங்கள் மதியம் 2.00 மணி அளவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , இடைமலைப்பட்டிபுதூரில் நடைப்பெற்றது ......ஐந்தில் ஒரு குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைக்கு எதிராக சமுதாய அக்கறையோடு சூரியன் எப்.எம்.நடந்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி அச்சம் தவிர் .இது குழந்தைகளுக்கு தொடுதல் பற்றிய சரியான புரிதலையும் தவறான தொடுதலின் போது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும் முயற்சி......
குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் போது எவ்வாறு தடுப்பது , தங்களை எவ்வாறு பாதுகாப்பது என்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை அளித்தனர் .பாலியல் கொடுமை பற்றிய விழிப்புணர்வை  குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் ....ஏனென்றால்  இது எந்த வயதிலும் நிகழலாம்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை புரிந்துகொள்வதோடு அவர்களிடம்  ஏற்படும் மாற்றங்களை  உடனடியாக கண்டறிய வேண்டும்
குழந்தைகள் வெளிப்படையாக பேசும் போது அவர்களை பெற்றோர்கள்  குற்ற உணர்வோடு பார்க்காதீர்கள் .விழிப்பணர்வு நிகழ்ச்சியை அருமையாக நடத்திய  திருமதி ராகிணி (Associate professor in Bishop heber  college)
திரு முத்து மாணிக்கம் (child
Development centre Trichy) மற்றும் சூரியன் Fm ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் பள்ளியின் சார்பில் நன்றி ..... “அச்சம் தவிர் “ விருதினை எம் பள்ளிக்கு வழங்கிய   சூரியன் Fmக்கு நன்றி !

Comments