'நெட்' தேர்வுக்கு கூடுதல் அவகாசம்

'கல்லுாரி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தேர்வுக்கு, வரும், 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, தகுதி பெறுவதற்கான, 'நெட்' தேசிய தகுதி தேர்வு, ஜூலையில் நடத்தப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்க, நேற்று தான் கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், வரும், 12ம் தேதி வரை, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்தை, வரும், 13ம் தேதி வரை செலுத்தலாம் என, சி.பி.எஸ்.இ.,அறிவித்துள்ளது

Comments