மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை
பொது நூலகத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு 'என்னைச் செதுக்கிய நூல்கள்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டன. தாலுகா, மாவட்ட மற்றும் மாநிலம் என பல்வேறு கட்டங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ளமூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி த.ஜீவஜோதிகாவின் கட்டுரை மாநில அளவில் முதலிடம் பெற்றது.
இதற்கான பரிசளிப்பு விழா சென்னையில் உள்ள அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் உலக புத்தக நாளான நேற்று (23/04/2018) நடைபெற்றது. முதலிடம் பெற்ற மாணவி ஜீவஜோதிகாவைப் பாராட்டிமாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கேடயமும் சான்றிதழும் வழங்கினாார்.
முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தேசிங்கு மற்றும் ராஜேந்திரன்,பள்ளி தலைமையாசிரியை பத்திரம்மாள், சக ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வாழ்த்திப் பாராட்டினர்.
Comments
Post a Comment