இருபதாண்டுகளாக அரசை ஏமாற்றி பணிபுரிந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ராந்தம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இதில், ரீட்டா, 47, என்பவர் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.


இவர், 1996 அக்., 7ல், பணியில் சேர்ந்தார். இவரது இடைநிலை கல்வி மதிப்பெண் சான்றிதழ், மாவட்ட கல்வித்துறை மூலம், உண்மை தன்மை ஆய்வுக்கு, அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில், போலி சான்றிதழ் என தெரிந்தது.

இதையடுத்து, ரீட்டாவை, &'சஸ்பெண்ட்&' செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இளவரசு உத்தரவிட்டார். அவர் மீது, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Comments