பள்ளி இலவச திட்டங்கள் விரைவுபடுத்த அரசு முடிவு
பள்ளி மாணவ - மாணவியருக்கு, வரும் கல்வியாண்டில், இலவச திட்டங்களை செயல்படுத்த, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்காக, பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இலவச சீருடைகள், புத்தகங்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களை, வரும் கல்வியாண்டில், விரைவாக செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக, 16.16 லட்சம், 'ஜியாமெட்ரி பாக்ஸ்' வாங்க, 5.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
அதேபோல், 15.15 லட்சம் பெட்டி, வண்ண பென்சில் வாங்க, 2.53 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ - மாணவியருக்கு, 58 லட்சம் ஜோடி, இலவச காலணிகள் வழங்குவதற்காக, 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றை வாங்கவும், டெண்டர் கோரப்பட்டுள்ளது.
Comments
Post a Comment