தமிழ்மொழியில் ரயில் டிக்கெட் : விரைவில் அமல்

தமிழகத்தில் ரயில் டிக்கெட் தமிழில் வழங்கப்படும்என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது விரைவில் அமுலுக்கு வருகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் ரயில்வே துறையை நவீனப்படுத்த பல்வேறு திட்டங்கள் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி ரயில் நிலையங்களில் கணினி மயமாக்கப்பட்ட தகவல் சேவை மையம், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், கண்காணிப்பு கேமராக்கள், இலவச வைபை, எஸ்கலேட்டர், லிப்ட் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளில் புதுமையை கொண்டுவர ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது.

இதன்படி ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டு வந்த ரயில் பயணிகளுக்கான டிக்கெட்டுகளில் ஊரின் பெயர்களை அந்தந்த மாநில மொழிகளில் அச்சிடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘நாட்டில் முதற்கட்டமாக கர்நாடக மாநிலம் பெங்களூரு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான டிக்கெட்டில் ஊர் பெயர்களை அம்மாநில மொழியில் அச்சிடும் திட்டம் கடந்த மார்ச் 1ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, தமிழகத்திலும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி இடம் பெறவிருக்கிறது. இதற்கான, கணினி தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்துள்ளது.

இதனால், தமிழக ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக பொது பிரிவுரயில் டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட்டுகளில் ஊர் பெயர்கள் தமிழில் அச்சிட்டு வழங்கப்படும். இந்த திட்டம் ஓரிரு நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும். தொடர்ந்து முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளிலும் தமிழ்மொழி அச்சிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்’என்றனர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!