பரீட்சையில பாஸ் பண்ணணுமா சூப்பர் டிப்ஸ்!!

உ.பி.,யில், பிளஸ் 2 விடைத்தாளில், ரூபாய் நோட்டுகளை வைத்து, தங்களை, 'பாஸ்' செய்துவிடும்படி, பல மாணவர்கள் கோரிக்கைகள் விடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.


உ.பி.,யில், 'பிளஸ் 2 தேர்வின் போது, முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தார்; தேர்வுக்கு பயந்து 1.8 லட்சம் மாணவர்கள், முதல் நாள் தேர்வு எழுத வரவில்லை. இதையடுத்து, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள், கடும் கண்காணிப்பின் கீழ் நடந்து முடிந்தன. தற்போது, விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது.
முறைகேடுகளில் ஈடுபட முடியாததால், பல மாணவர்கள், விடைத் தாள்களில், தங்களை, 'பாஸ்' செய்துவிடும்படி, ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். சிலர், தங்கள் குடும்ப சூழலை கூறி, உருக்கமாக கடிதம் எழுதி உள்ளனர். சில மாணவர்கள், தங்கள் காதல் கதைகளைக் கூட, விடைத்தாள்களில் எழுதி உள்ளனர்.
'நான் தேர்ச்சி அடையவில்லை என்றால், என் தந்தை என்னை கொன்று விடுவார்' என, ஒரு மாணவர் குறிப்பிட்டுள்ளார். பல மாணவர்கள், 50, 100, 500 ரூபாய் நோட்டுகளை, விடைத்தாளுடன் இணைத்து, தங்களை, 'பாஸ்' செய்துவிடும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
நம்ம ஊருக்கு ஒரு டிப்ஸ்
வாத்தியாரே நீ உண்மையான தமிழனா இருந்தால் பாஸ்மார்க் போட்ரு

Comments