கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த உயர்நீதி மன்றம் விதித்த தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு


புதுடில்லி : கூட்டுறவு சங்க தேர்தலுக்கு ஐகோர்ட் மதுரை கிளை விதித்த தடை உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளில் ஐகோர்ட் தலையிட்டு தடை விதித்திருக்க முடியாது. ஐகோர்ட் கிளை விதித்த தடையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Comments