ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கூகுள் அளித்துள்ள புதிய வசதி.!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதுதான் துல்லியமாக கேட்கும் வகையில் உதவும் புதிய பாட்காஸ்ட் பிளேயர். ஆண்ட்ராய்டு பயனாளிகள் பிற பிளேயர்ஸ்களை பணம் கொடுத்து பயன்படுத்தி வந்த நிலையில் கூகுள் தற்போது எவ்வித கட்டணமும் இன்றி இந்த பிளேயரை அறிமுகம் செய்துள்ளது. 

கூகுள் பிளே மியூசிக் அளவிற்கு உள்ள இந்த பிளேயரை நீங்கள் எந்த செயலியின் உதவியின்றி கூகுள் சியர்ச் மூலமே பயன்படுத்தலாம் என்பது சிறப்பு தகவல்.

கூகுள் நிறுவனம் இந்த பாட்காஸ்ட் நிறுவனமான பசிபிக் குறித்த தகவல்களையும் சியர்ச் ரிசல்ட்டில் அளித்துள்ளது. இந்த சியர்ச் தகவல் மூலம் இந்த பாட்காஸ்ட் ஆண்ட்ராய்டு பயனாளிக்கு மிகுந்த பயனளிக்கின்றது என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை அறிமுகம் செய்த முதல் நாளிலேயே சியர்ச் மூலம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. 

எனவேதான் இந்த வசதியை நாங்கள் ஆண்ட்ராய்டு பயனாளிகள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற முழு முயற்சியில் இறங்கியுள்ளோம் என்று கூகுள் பாட்காஸ்ட் புரடொக்சன் மேனேஜர் ரெனுவ் வெடன் தெரிவித்துள்ளார். 

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளிகள் தற்போது கூகுள் சியர்ச் என்ற வசதியின் மூலம் மிக எளிதாக இந்த பாட்காஸ்ட் பிளேயரை அடைய முடியும். நீங்கள் ஒரு ஷோ பெயரை டைப் செய்தால் முதலிடத்தில் பாட்காஸ்ட் உங்களுக்கு தெரியும். அதன் மூலம் நீங்கள் லேட்டஸ்ட் பகுதியினை கேட்க முடியும். மேலும் இதன் ஷார்ட்கட் வடிவமும் பயனாளிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.


மேலும் இந்த பாட்காஸ்ட் பிளேயரை நீங்கள் கூகுள் ஹோமில், கூகுள் அசிஸ்டெண்ட் மூலமும் பெற முடியும். ஒரே ஒருமுறை ஓகே கூகுள் என்று கூறி பாட்காஸ்ட் பெயரை மட்டும் நீங்கள் குரலில் கூறினால் போதும், உடனே உங்களின் விருப்பத்திற்குரிய இசையை உங்களால் கேட்க முடியும்,. மேலும் நீங்கள் எந்த இடத்தில் விட்டு சென்றீர்களோ மீண்டும் அந்த இடத்தில் இருந்து நீங்கள் விட்டதை கேட்கும் வசதிஊம் உண்டு. 

ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு அப்பிள் நிறுவனம் தனது ஐஒஎஸ் டிவைசில் பாட்காஸ்ட் வசதியை அளித்தது என்றாலும், அது வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறவில்லை. 

பெரும்பாலான ஐபோன் பயனாளிகள் இந்த பாட்காஸ்ட் மூலம் இசையை கேட்கின்றார்கள் என்றாலும் இனிவரும் காலத்தில் ஆண்ட்ராய்ட் பயனாளிகளும் அதற்கு இணையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பாட்காஸ்ட் புரடொக்சன் மேனேஜர் ரெனுவ் வெடன் தெரிவித்துள்ளார்.


Comments