குழந்தைகளின் தகவல்களை குறிவைக்கும் பிளே ஸ்டோர் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்.!

தற்சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக குழந்தைகள் புத்தகங்களை படிப்பதை விட ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் தளத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். 

மேலும் இப்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது, அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் அதிகமான செயலிகள் குழந்தைகளின் தனியுரிமை மீறுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக ஆயிரக்கணக்கான செயலிகள் பெற்றோர்களின் அனுமதியின்றி குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து இருப்பதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


6000 செயலி


இதுவரை பிளே ஸ்டோரில் இருக்கும் 6000 செயலிகளை ஆய்வு செய்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள், அதில் பெரும்பாலான


செயலிகள் குழந்தைகளின் ஆன்லைன் தனியுரிமை பாதுகாப்பு சட்ட விதியை மீறுவது கண்டறியப்பட்டுள்ளது.


பாதுகாப்பு


குறிப்பாக ஆய்வு செய்யப்பட்டதில் அதிமான செயலிகள் டிராக்கிங் மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் குழந்தைகளின் தகவலை சேகரித்து இருக்கின்றது. மேலும் 50 சதவீதம் செயலிகள் விதிகளுக்கு உட்பட்ட பாதுகாப்பு முறைகளை பின்பற்றவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


டிஸ்னி:


மேற்கூறிய படி 6000 செயலிகளில் 5,855 செயலிகள் சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டால் செய்துள்ளனர், பின்புவிரைவாக தகவல்களை சேகரிக்கும் தன்மை கொண்டுள்ளது இந்த செயலிகள். மேலும் இது தொடர்பாக டிஸ்னி, டியோலிங்கோ போன்ற நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


டெவலப்பர்கள்:


டெவலப்பர்கள் சரியான பாதுகாப்பு வசதி மற்றும் சட்ட விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர், மேலும் கூகுள் நிறுவனம் சட்டவிதிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டயாத்தில் உள்ளது.


பேஸ்புக்:


மேலும் பேஸ்புக் போன்று கூகுள் நிறுவனமும் டேட்டா டிராக்கிங் தொழில்நுட்பம் மூலம் அதிக லாபம் பெருகிறது என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!