கூகுளில் உங்களைப் பற்றிய தகவல்கள் எவ்வளவுஉள்ளன?

உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக் பயனர்களின்தகவல்களை அவர்களின் அனுமதி இன்றி சேமித்து வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தின் செயலும் கண்டறியப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய தேடுதளமான கூகுள், பயனர்களுக்குத் தேவையான பல்வேறு தகவல்களைச் சேமித்து வைக்கும் இடமாக மட்டுமின்றி பயனர்களின் சொந்த தகவல்களையும் சேமித்து வைக்கும் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது.

கூகுள் நிறுவனம் பயனர்கள் தேடும் தகவல்களையும் ஒரு பயனரின் அன்றாட நடவடிக்கைகளையும் சேமித்து வைத்துக்கொண்டு அதன் செயல்பாடுகளை மேம்படுத்தி வருகிறது. சமீபத்தில் கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சி மையம் கண்டறிந்த தகவலில் ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவல்களை அவர்களது அனுமதி இன்றி சேமித்து வருவது தெரியவந்தது.ஃபேஸ்புக் ஆனது பயனர்களின் அழைப்பு வரலாறுகள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றைச் சேமித்து வைத்துக்கொண்டுள்ளது அந்தத் தகவலில் வெளியானது. அதில் பயனர்களின் தகவல்கள் ஃபேஸ்புக்கில் சேமிக்கப்பட்டுள்ளதைக் கண்டறியவும் வழிமுறைகள் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் பல்வேறு ஃபேஸ்புக் பயனர்கள் அவர்களின் தகவல்களைப் பதிவிறக்கம் செய்தனர். ஆனால் ஃபேஸ்புக் நிறுவனம் மட்டும் அவ்வாறான செயலில் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூகுள் நிறுவனமும் சேர்ந்தே பயனர்களின் தகவல்களைச் சேமித்து வைத்துவருவதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது.

கூகுள் நிறுவனத்தில் தகவல் சேமிப்பு

கூகுள் நிறுவனம் எவ்வாறான பயனர்களின் தகவல்களைச் சேமிக்கிறது என்பதற்காக டிலன் குரன் என்ற இணையதள வடிவமைப்பாளர் சோதனை ஒன்றை மேற்கொண்டார். அதில் அவர் அனுப்பிய மெயில்கள், ஸ்பேம் என நீக்கம் செய்த தகவல்கள் மற்றும் அவரது பயன்பாட்டில் உள்ள மெயில்கள் என மொத்தமாக 5.5GB அளவிலான பைல்களை அந்த ஒரு கணக்கில் கூகுள் நிறுவனம் சேமித்து வைத்துள்ளது. இதைக் கண்டறிந்த டிலன் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தத் தகவலை பதிவிட்டுள்ளார். கூகுள் நிறுவனம் பயனர்களின் புக்மார்க், இ-மெயில், தொடர்புகள், புகைப்படங்கள், வாய்ஸ் ரெக்கார்டுகள் மற்றும் பயனர்களின் தேடுதல் வரலாறு போன்றவற்றைச் சேமித்து வைக்கிறது. அதுமட்டுமின்றி கூகுள் நிறுவனத்தின் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும் பயனர்களிடம் இருந்தும் சில தகவல்களைப் பெற்றுக்கொள்கிறது.

Comments