ANDROID PHONE வைத்துள்ளீர்களா? இந்த 7 ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க..
பெரும்பாலான பயனர்களுக்கு ஸ்மார்ட்போனுக்குள் ஒளிந்துள்ள பல அம்சங்கள் தெரிந்துகொள்ளவே இல்லை. அதனால் அவற்றை பயன்படுத்தவும் முடிவதில்லை. இந்த வசதிகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் மேலும் சிறப்பான அனுபவத்தை பெறமுடியும். இதோ உங்கள் ஆண்ட்ராய்டு போனில் மறைந்துள்ள 7 சிறப்பம்சங்கள்..
நமக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என எண்ணும் போது ' டோன்ட் டிஸ்டர்ப்' என்னும் வசதியை பயன்படுத்துவோம். இதில் ' பிரியாரிட்டி ஒன்லி' என்ற வசதி இருப்பதை வெகு சிலரே அறிவர். இதன் மூலம் முக்கிய நபர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், முக்கிய நேரங்களில் யார் உங்கள் தொந்தரவு செய்யலாம், செய்யக்கூடாது என முடிவு செய்யலாம்.
வீட்டிற்குள் சென்றவுடன் போன் தானாக அன்லாக் செய்யும் வசதி
இந்த ஸ்மார்ட் லாக் வசதி ஒரு சில காரணங்களால் உண்மையிலேயே ஸ்மார்ட் தான். நம்பத்தகுந்த இடங்கள் பட்டியலில் உங்கள் வீட்டை இணைத்துவிட்டால், நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் போன் தானாகவே அன்லாக் ஆகிவிடும். இந்த வசதியை பயன்படுத்த, ஜி.பி.எஸ்-ஐ ஸ்விட்ச் ஆன் செய்திருக்க வேண்டும்.
இதயத்தை கண்காணித்தல்
உங்கள் இதய துடிப்பை கண்காணிக்க வேண்டுமென்றால், கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள 'Instant Heart Rate' என்ற செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள். பின்னர் அந்த செயலியை இயக்கி கேமரா மீது உங்கள் சுட்டு விரலை வைப்பதன் மூலம் இதய துடிப்பை கணக்கிடலாம்.
திரை உருப்பெருக்கியை பயன்படுத்துங்கள்
உங்களுக்கு கண்பார்வை குறைவாக இருந்தால், திரை உருப்பெருக்கி (screen magnifier)மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Settings-> Accessibility-> Magnification மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம். ஒரு விரலை வைத்து திரையில் தட்டுவதன் மூலம் எளிதாக திரையை பெரிதாக்கலாம்.
கெஸ்ட் மோடை பயன்படுத்துங்கள்
உங்கள் போனை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் போது, கண்டிப்பாக 'கெஸ்ட் மோட்' ல் தான் தரவேண்டும். இந்த மோடில் உங்கள் போனில் உள்ள அனைத்தும் போனை பயன்படுத்துபவருக்கு மறைக்கப்படும். இதை பயன்படுத்த முதலில் நோட்டிவிக்கேசன் பாரை கீழே இழுத்து, உங்கள் ப்ரோபைலை கிளிக் செய்து 'Add Guest' ஐ தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் குரோம் டேப்களை போனை தவிர மற்ற கருவிகளில் பயன்படுத்துங்கள்
இதை பயன்படுத்த உங்கள் அனைத்து கருவிகளிலும் ஜிமெயில் ஐடி மூலம் உள்நுழைய வேண்டும். பின்னர் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யும் போது திறக்கும் பட்டியலில் 'ரிசன்ட் டேப்ஸ்'ஐ தேர்வு செய்யவும். இதன் மூலம் வேறு கருவிகளில் சமீபத்தில் பயன்படுத்திய டேப்களை கூட திறக்க முடியும்.
இரவில் கலர் இன்வெர்சன் வசதியை பயன்படுத்துங்கள்
இரவு நேரங்களில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது கண்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என நினைத்தால், Settings ல் ' Colour inversion' என்ற வசதியை இயக்குங்கள்.
Super sir
ReplyDelete