3,550 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு

மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., அறிவிப்பின் கீழ், 3,550 பட்டதாரி ஆசிரியர்கள், 710 ஆய்வக உதவியாளர்கள்,710 இளநிலை உதவியாளர்கள் என, 4,970 பணியிடங்கள், 2011 - 12ல் நிரப்பப்பட்டன.


  இந்த திட்டத்தில், ஆண்டுதோறும் பணி நீட்டிப்பு வழங்கி, மத்திய அரசின் நிதியில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2017 -18ல், 4,970 பணியிடங்களுக்கு, பணி நீட்டிப்புஉத்தரவு முடிவுக்கு வந்தது. இந்நிலையில், 3,550 ஆசிரியர்கள் உள்ளிட்ட, 4,970 பணியிடங்களுக்கு, 2020வரை பணி நீட்டிப்பு வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!