கல்வித்தகுதியை உறுதி செய்யாவிட்டால் தென்மாவட்ட கல்லூரி ஆசிரியர்களில் 30% பேர் வேலையிழக்கும் அபாயம்

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 30 சதவீத கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் தகுதியை நிரூபிக்காவிட்டால் வேலை இழக்கும் வாய்ப்பு உள்ளது என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:  கடந்த செமஸ்டர் தேர்வுக்கு விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் குறித்து கணக்கெடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 70 முதல் 80% ஆசிரியர்கள் வந்தால் கூட 15 நாட்களில் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு ரிசல்ட் வெளியிட முடியும்.

பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் உரிய கல்வித்தகுதி இல்லாதவர்கள் இருப்பின் அவர்கள் தங்கள் தகுதியை உறுதி செய்து தெரிவிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அதன் பின்னரும் விரிவுரையாளர்களுக்கான கல்வித்தகுதியை ஏற்படுத்திக் கொள்ளாதவர்கள் மீது வரும் கல்வியாண்டில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்படும் போது 30 % ஆசிரியர்களின் பணிக்கு சிக்கல் வரலாம். வரும் கல்வியாண்டு முதல் 5 ஆண்டு படிப்பான ஒருங்கிணைந்த எம்எஸ்சி பயோ - டெக்னாலஜி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில்30 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!