குரூப் - 2 பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு

'குரூப் - 2 தேர்வில், 45 பதவிகளுக்கு மட்டும், வரும், 25ல் கவுன்சிலிங் நடத்தப்படும்&' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

குரூப் - 2 பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு இது தொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:'குரூப் - 2&' பணிகளுக்கான, நேர்முக தேர்வு உள்ள பதவிகளை நிரப்ப, எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜன., 22 முதல், பிப்., 19 வரை, நேர்காணல் நடந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.மீதம் உள்ள, 88 காலியிடங்களில், 45 பதவிகளுக்கு மட்டும், இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும், 25ல் நடத்தப்படும்.
இதில், 1 : 5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் பங்கேற்கலாம்.இதுகுறித்த விபரங்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில், http://www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளன.ஏற்கனவே, முதல்கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்று, அடிப்படை சம்பள விகிதம், 9,300 ரூபாயில், ஏதேனும் ஒரு பதவியை தேர்வு செய்தவர்கள், தற்போதைய காலியிடங்களை தேர்ந்தெடுக்க விரும்பினால், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments