பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் - தேர்வுத்துறை கட்டுப்பாடு நீக்கம்

பிளஸ் 2 விடை திருத்த விதிகளில், கொள்குறிவகை வினாக்களுக்கான, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 தேர்வு முடிந்து, நேற்று முன்தினம் முதல், விடைத்தாள் திருத்தும் துவங்கியுள்ளது. முதல் நாளில், தலைமை விடை திருத்துனர்கள், விடைத்தாள்களை திருத்தம் செய்தனர்.


அப்போது, அரசு தேர்வுத்துறை வழங்கிய, புதிய கட்டுப்பாட்டால், பல மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவது தெரிய வந்தது.அதாவது, கொள்குறி வகை என்ற, 'அப்ஜெக்டிவ்' வினாக்களில், சரியான விடையை தேர்வு செய்யும் போது, விடையையும், அதற்கான குறியீட்டையும் சேர்த்து எழுத வேண்டும்.அவ்வாறு, எழுதாதோருக்கு மதிப்பெண் வழங்க வேண்டாம் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாடு குறித்து, வினாத்தாளிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மாணவர்கள் கவனக்குறைவால், விடை அல்லது குறியீட்டை மட்டுமே எழுதியிருந்தனர்.இது குறித்து, தேர்வுத்துறையிடம் ஆசிரியர்கள் முறையிட்டனர். இந்த பிரச்னை குறித்து, நமது நாளிதழிலும், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, விடை திருத்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு, புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மதிப்பெண், அப்ஜெக்டிவ் வகை வினாக்களில், விடைக்கான குறியீடு அல்லது விடையில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் எழுதியிருந்தால், அதற்கு மதிப்பெண் வழங்கப்படும்.

விடைக்குறியீடு மற்றும் விடை என, இரண்டையும் எழுதி, அதில் ஒன்று, விடைக்கு பொருத்தமானதாக இல்லாவிட்டால், அந்த கேள்விக்கு, பூஜ்யம் வழங்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.

Comments