ரூ.2200 மதிப்புடைய சலுகையை அறிவித்த ஜியோ
இந்தியாவில் பழைய டாங்கிள்களை வழங்கி புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் பெறுவோருக்கு ரிலையன்ஸ் புதிய சலுகைகளை வழங்குகிறது.
அந்த வகையில் பழைய டாங்கிள்களை கொடுத்து புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் வாங்குவோருக்கு புதிய வைபை ரவுட்டர் மற்றும் ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஜியோஃபை எக்ஸ்சேஞ்ச் குறுகிய கால சலுகையை பெற என்ன செய்ய வேண்டும்?
- ஜியோஃபை போர்டபிள் வைபை ரவுட்டரை ரூ.999 செலுத்தி வாங்க வேண்டும்
- ஜியோ பிரைம் ரூ.99 மற்றும் ரூ.198 அல்லது ரூ.299 செலுத்தி சிம் கார்டினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்
- உங்களின் பழைய ஜியோ அல்லாத டாங்கிளை ஏதேனும் ஜியோஸ்டோர் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் வழங்க வேண்டும்
- பழைய ஜியோ அல்லாத டாங்கிள் அல்லது மோடெமின் சீரியல் நம்பரை வழங்கி, புதிய ஜியோஃபை MSISDN நம்பரை பெற வேண்டும்
- உங்களுக்கான கேஷ்பேக் உடனடியாக மைஜியோ கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்
ரூ.2200 மதிப்புடைய கேஷ்பேக் ரூ.50 மதிப்புடைய மொத்தம் 44 வவுச்சர்களாக வழங்கப்படும், இவற்றை ரூ.198 மற்றும் ரூ.299 ரீசார்ஜ் செய்ய மட்டும் பயன்படுத்தலாம்.
கடந்த ஆண்டு அறிமுகமான ஜியோஃபை ரவுட்டர் அதிக வரவேற்பை பெற்றது. கடந்த ஆணஅடு செப்டம்பரில் வெளியான தகவல்களில் டேட்டா கார்டு சந்தையில் ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஜியோஃபை மட்டும் 91% பங்குகளை பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இலவச டேட்டா வழங்கியதன் மூலம் அதிக பிரபலமான ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது.
போர்டபிள் ஹாட்ஸ்பாட் சாதனம் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் வைபை வசதி கொண்டு பத்து சாதனங்களிலும், ஒரு சாதனத்திற்கு யுஎஸ்பி மூலம் இணைத்து பயன்படுத்தும் வசதியை ஜoியோஃபை ஹாட்ஸ்பாட் வழங்குகிறது.
இதில் உள்ள OLED டிஸ்ப்ளே நெட்வொர்க் சிக்னல், பவர், வைபை ஸ்டேட்டஸ் மற்றும் இதர தகவல்களை வழங்குகிறது. இந்த சாதனம் கொண்டு அதிவேக 4ஜி இன்டர்நெட் பயன்படுத்த முடியும். இத்துடன் வைபை ஹாட்ஸ்பாட்களை உருவாக்க முடியும். மேலும் ஹெச்டி வாய்ஸ் கால், வீடியோ கால், மெசேஜிங் உள்ளிட்ட வசதிகளும் வழங்குகிறது.
Comments
Post a Comment