17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 17 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)
அசோக் டோங்ரே: பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையாளர் (தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புதுமுக பயிற்சிகள் நிறுவனத்தின் இயக்குநர்)
வி.இறையன்பு -தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புதுமுக பயிற்சிகள் நிறுவனத்தின் இயக்குநர் (பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையாளர்)
எஸ்.ஜெயந்தி -ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் (கால்நடை பராமரிப்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகள் துறை முன்னாள் இயக்குநர்)
எஸ்.செந்தாமரை -ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை துணைச் செயலாளர் (வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர்)
எஸ்.அமிர்தஜோதி -தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை துணைச் செயலாளர் (தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர்)
டி.மோகன் -பொதுத் துறை (மரபுகள்) துணைச் செயலாளர் (பொதுத் துறை துணைச் செயலாளர்)
சந்தியா வேணுகோபால் ஷர்மா -ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையாளர் (விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பினார்)
ஆர்.நந்தகோபால் -தொழிலாளர் நலத் துறை ஆணையாளர் (தொழிலாளர் நலத் துறை இணை ஆணையாளர்)
பி.குமாரவேல் பாண்டியன் -வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் (கலால் துறை துணை ஆணையாளர் -சென்னை)
டி.பாஸ்கர பாண்டியன் -முதல்வரின் தனிப் பிரிவு அலுவலர் (நீலகிரி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்)
எம்.விஜயகுமார் -எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர்)
(தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக உள்ள பி.சந்திரமோகன், எல்காட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக தொடர்ந்து கவனிப்பார்)
எஸ்.பி.கார்த்திகா -தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கக தலைமை செயல் அலுவலர் (சர்க்கரைத் துறை முன்னாள் கூடுதல் இயக்குநர்)
கிள்ளி சந்திரசேகர் -தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (மதுராந்தகம் சார் ஆட்சியர்)
பி.என்.ஸ்ரீதர் -தமிழ்நாடு மின்வாரிய இணை நிர்வாக இயக்குநர் (தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர்)
கே.கற்பகம் -தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் (கோவை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர்)
ஜெ.ஆனி மேரி ஸ்வர்னா: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (மருத்துவ சேவைகள் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர்)
எஸ்.விசாகன்: தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநர்)

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!