ஆசிரியர்கள் பார்த்து ரசிக்கவும் பெருமை கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் ஏராளமான காட்சிகளும் வசனங்களும் நிறைந்த படம்‌ hitchki.

ராணி முகர்ஜி ஆசிரியையாக நடித்து இந்தவாரம் வெளியான இந்திப்படம்.

 'தாரே ஜமீன் பர்' படம் வந்தபின் டிஸ்லெக்சியா பற்றிய பேச்சு நாடெங்கும். பயிற்சிகளும் நடைபெற்றன.
hitchki படமும் ஒரு நரம்பியல் குறைபாடு குறித்துப் பேசுகிறது. அது Tourette's syndrome.

கிக்கீ...என்ற ஒலியையும் வெட்டி இழுக்கும் உடலசைவையும் அவ்வப்போது ஏற்படுத்துவது இது. குணப்படுத்த முடியாது என்றாலும் இதனால் பெரிய பாதிப்பு இல்லை.

டாரட் குறைபாடுடையவர்  ஆசிராகத்தான்‌ வேலை செய்யவேண்டும்  என்று விரும்புகிறார்.  அதனால் ஏற்படும் நிகழ்வுகளே இப் படம்.

டாரட் குறைபாட்டால் நைனா மாத்தூருக்கு எந்தப்பள்ளியிலும் ஆசிரியர் வேலைகிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்கிறார்.

நகரின் சிறந்த தனியார் பள்ளி.
அதில்  கல்வி உரிமைச் சட்டத்தின் படி இடம்பெற்ற சேரிப்பகுதிக் குழந்தைகளைத்  தனி வகுப்பாக வைத்திருக்கிறார்கள். எனவே அவர்கள் கடும் சேட்டைக்காரர்களாக இருக்கின்றனர்.

சேட்டைக்கார மாணவ மாணவியரால் ஆசிரியர் யாரும் அப்பள்ளியில் நிலைப்பதில்லை. வேறு வழியின்றி நைனா மாத்தூருக்கு அந்தப்பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைக்கிறது.

ஆசிரியையை விரட்டத்துடிக்கும் மாணவ மாணவியர். அவர்களுக்குக் கற்பிக்க முயலும் ஆசிரியை.
முதல்நாள் வகுப்பறையிலேயை கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார் ஆசிரியை. தொடர்ந்து அவர்களது சேட்டைகள் அதிகரிக்கின்றன.
தனது மாணவ மாணவியரிடம் தன்னம்பிக்கையை விதைக்க ஆசிரியை பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளுகிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறார். இறுதியில் அனைவரும் தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.

Front of the class என்ற நாவலைத் தழுவி அதே பெயரில் வெளியான ஆங்கிலப்படத்தின் தழுவல் இப்படம்.

ஆசிரியர்கள் பார்த்து ரசிக்கவும் பெருமை கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் ஏராளமான காட்சிகளும் வசனங்களும் நிறைந்த படம்‌ hitchki.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்