அரசு உதவிபெறும் பள்ளியில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நியமன ஒப்புதல் வழங்க வேண்டும் : அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
வேலூர் மாவட்டம், மாதனூரில் தாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவிபெறும் இப்பள்ளியில் இளநிலை உதவியாளர், எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி ஆகிய பணியிடங்கள் காலியாக இருந்தன.
இந்த பணியிடங்களுக்கு கோபி, ரஞ்சனி, யோகநாதன், சாரதி ஆகியோரை பள்ளி நிர்வாகம் நியமித்தது. அந்த நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.
ஆனால், பள்ளியின் கோரிக்கை மனுவை கல்வித்துறை பரிசீலிக்கவில்லை. இதையடுத்து, தங்களது பள்ளியில் நிரப்பப்பட்ட பணியிடங்களுக்கான ஒப்புதலை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிடக்கோரி பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத காலியிடங்களை நிரப்ப கல்வி நிறுவனத்திற்கு உரிமை உள்ளது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது என்று கூறிய நீதிபதி, சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு 2 வாரத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Court order plz
ReplyDelete