கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு
கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் தக்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக வேலூரைச் சேர்ந்த அசோக்குமார் உள்ளி்ட்ட 4 பேர் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாசிலாமணி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக கூட்டுறவு சங்க அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி வேட்பாளர்களின் மனுக்களை அவர்கள் பெறுவதில்லை. மீறிப் பெற்றாலும் அற்ப காரணங்களைக் கூறி அவற்றை நிராகரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் தேர்தல் நடந்தால் அது முறையாக நடக்காது. எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறுஅதில் கோரியுள்ளனர்.
ஆசிாியா் கூட்டுறவு சங்க இயக்கநா் தோ்தல் நாகைமாவட்டம் செம்பனாா்கோயிலில் சில ஆசிாிய சங்கங்களின் கூட்டமைப்புக்கு இயக்குநா் பதவியை தரவில்லை . முழுவதும் எம்எல் ஏ வால் வழங்கபடுகிறது
ReplyDelete