பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தரும் அதிர்ச்சிகளும் செய்திகளும்

தமிழ் முதல்தாள் தந்த அதிர்ச்சிகள் "தம்பிகளா இனி சிந்தித்து விடையளிக்கும் விதமாகத்தான் வினாத்தாள் இருக்கும், தயாரா இருந்துக்கங்கப்பா என்று சொல்ல வைத்தது"எதிர்பார்த்தது போலவே வினாத்தாள் வந்திருக்கிறது. 

கடந்த அரைமணிநேரமாக ஒவ்வொரு மாவட்டமாக, ஒவ்வொரு பள்ளியாக கேட்டாகிவிட்டது. எல்லோரும் சொல்லும் ஒரே பதில் "இந்த பாடத்திட்டம் வந்ததில் இருந்து கேட்கப்பட்ட மிக மோசமான வினாத்தாள் இதுதான்" என்னுடைய தோழர் ஒருவர் பெஸ்ட் கொஸ்டின் பேப்பர் என்று சொல்கிறாரே என்றேன்.

ஒருவிசயத்தை புரிஞ்சுக்கங்க ஒருவருடம் படித்த பாடத்தில் இருந்து பதிலளிக்க இயலாத புள்ளியை நோக்கி துரத்தும் வினாத்தாள் பெஸ்ட் அல்ல வொர்ஸ்ட் என்றார் நான் மதிக்கும் கல்வியாளர் ஒருவர். 

ஆம், வினாத்தாள் அமைப்பதில் வித்தை காட்டும் நம்மவர்கள் விடையளிக்கும் தகுதியும் திறனையும் வளர்த்திருக்கிறோமா ? கடைக்கோடி கிராமத்தில் மின் வசதிகூட இல்லாத குழந்தைகள் புரிந்து பதிலளிப்பார்களா என்று உணர்ந்து பார்த்து வினாத்தாள் அமைக்க வேண்டும்.  

பல கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் தர முடியும். ஆனால் மிகச்சரியானது என்று பார்த்தால் ஒன்றுதான் தேறும் 
act +
ion 
ive
என்ற இரண்டு வாய்ப்புகளில் இரண்டை சேர்த்தாலும் முழுமையான வார்த்தை ஒன்று கிடைக்கும் என்றாலும் புரிதலோடு எழுதினால் ஆக்டிவ்தான் பதில். இப்படி சுழற்றி அடிக்கும் வினாக்கள் முதல் தலைமுறை கற்போரை என்ன செய்யும் என்கிற கேள்விக்கு பதில் இல்லை.

புரிந்துகொண்டால் அது குரூரமானது. உங்களுக்கெல்லாம் எதுக்குடா படிப்பு, போங்கடா போய் உங்க அப்பன் ஆத்தா வேலையை பாருங்கடா என்பதுதான் இந்த வினாத்தாள் நமக்கு சொல்லும் செய்தி. 

உங்கள் புரிதலுக்காக ... ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் எல்லா பாடத்தையும் ஆங்கிலத்தில் பயில்வதால் அவர்களின் ஆங்கில மொழி நுகர்வு அதிகம். அவர்கள் பல ஸ்ட்ரக்சர்களை தனிச்சயாக அறிமுகம் செய்துகொள்வார்கள். 


அவர்களுக்கு இந்த கேள்வி எளிதாக இருக்கும், (அங்கும் போன் செய்திருக்கிறேன் இன்னும் தகவல் வரவில்லை) ஆனால் அரசுப்பள்ளியில் கொத்தனார், சித்தாள், விவசாயி, போன்ற எளிய மக்களின் குழந்தைகள் பயிலும் சூழலில் தமிழ் நுகர்வே குறைவு, இதில் ஆங்கில நுகர்வை எப்படி கூட்டுவது? 

தமிழ் நூற்களை கொடுத்து படிக்கச் சொன்னாலே போயா யோவ் என்கிற மாணவர்களிடம் ஆங்கில செய்தித்தாட்களை எப்படி அறிமுகம் செய்வது? 

இப்படி ஆங்கிலத்தை புழக்கத்தில் கொண்டுவந்ததற்கு பின்னரே சிந்தனை திறனை வளர்க்கும் கேள்விகளை கேட்பது சாத்தியம். அதைவிடுத்து நீட்டுக்கு தயார் செய்கிறேன், மாணவர் சிந்தனைத்திறனை தூண்டும் வினாத்தாட்களை வடிமைக்கிறேன் என்று கிளம்புவது சமூக நீதிக்கு எதிரானது. 

ஒரு பெரும் திரள் மாணவர்களை இருட்டுக்குள் தள்ளிவிட்டு, ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் அவர்களை அனுப்பிவிட்டு லாடு வீட்டு கோலா புட்டுக்களுக்கு மட்டும் கல்வி என்பது சமூகத் துரோகம். இது ஆசிரியப் பேரினம் விழித்துக்கொள்ளவேண்டிய தருணம். 

மாட்டு வண்டியில் ராக்கெட் எஞ்சின்களை பொருத்துவது கேலிக்கூத்து. முதலில் எங்களுக்கு ராக்கெட் கொடுங்கள் அப்புறம் நாங்கள் செலுத்திக்கொள்கிறோம்.இந்த வினாத்தாளை எதிர்கொள்ள என்ன என்ன பணிகளை செய்ய வேண்டும். 

1. எல்லா பள்ளிகளும் ஸ்மார்ட் போர்ட் கொண்ட பள்ளிகளாக மாற வேண்டும். 

2. பாடத்தின் ஒவ்வொரு சின்ன தலைப்பிலும் மாநிலம் தழுவிய விவாதத்தை நடத்தவேண்டும். ஸ்மார்ட் போர்ட் வாயிலாக இணையத்தின் வழியே 

3. மாணவர்களே சிந்தனைத்திறனை தூண்டக்கூடிய கேள்விகளை வடிமைக்க பயிற்சியளிக்க வேண்டும். 

4. ஒரே பாடத்தை ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து அணுகுவார்கள். இப்படிப்பட்ட காணொளிகளை தொகுத்து யூ டியூபில் பகிர்ந்து, அவற்றை மாணவர்கள் வகுப்பறையில் பார்க்கும் வசதியைத் தர வேண்டும். 

5. மாணவர்கள் மத்தியில்  வினாத்தாள் ஐம்பது இரண்டு கேள்விகளும் விரிவான விவாத்திற்கு உட்படுத்தப்பட்டு ஆழமான புரிதலை மாணவர்கள் அடைய வழி வகை செய்ய வேண்டும். 

6. நூலக வாசிப்பு, ஆங்கில செய்தித்தாள் வாசிப்பு, ஆங்கில நாடக அரங்கேற்றம் போன்றவை கட்டாயமாக்கப் படவேண்டும். 

7. பேச்சுத்திறனுக்கு அக மதிப்பீட்டு முறை வேண்டும். இப்படி எந்த ஆக்கபூர்வமான அடிப்படை மாற்றங்களையும் செய்யாமல் வினாத்தாள் அமைப்பை மாற்றி நீட்டுக்கு தகுதிபடுத்துகிறேன் என்பது சமூக அநீதி. 

எல்லா பயலுமா நீட் எழுதப் போறான் ? புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால் நெல் விளைந்த வயலில் கோதுமையை அறுவடை செய்ய விரும்புகிறது இந்த வினாத்தாள் ... வர்ணம் பரவுகிறது ...

Comments

Post a Comment

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!