ஜாக்டோ - ஜியோ இன்று பேரணி
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்து கின்றனர்.இது குறித்து, ஆசிரியர், அரசு ஊழியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ செய்தி தொடர்பாளர், தியாகராஜன் கூறியதாவது:
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை போல், ஜன., 2016 முதல், ஊதிய உயர்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தொகுப்பூதிய ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட, அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில், இன்று பேரணி நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment